நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினருக்கும் அடுத்த 8 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டிய பொறுப்புள்ளது.. நாம் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சியை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வர வேண்டும்.. எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் உள்ளது..
மிகக் கடுமையாக இந்த 4 ஆண்டுகள் நாம் உழைத்திருக்கிறோம்.. மக்களுக்காக போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.. எத்தனையோ பேர் சிறை சென்றிருக்கிறோம்.. இந்த 8 மாதங்கள், இன்னும் கடுமையாக உழைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது..
முதல்வர் ஸ்டாலினுக்கு எதை பார்த்தாலும் பயம்.. ஆர்ட்டிகள் 370 பயம், புதிய கல்விக் கொள்கை பயம், பிஎம் ஸ்ரீ திட்டம் பயம்.. எதை பார்த்தாலும் பயந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டாலின் இருக்கிறார்..
ஊழல் செய்து 30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள், முதலமைச்சர்களின் பதவி இருக்காது.. எல்லாவற்றையும் பார்த்து பயந்து பயந்து இருக்கும் முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது..
மத்திய பாஜக ஆட்சி தமிழர்களுக்கு எவ்வளவு பெருமை கொடுத்து கொண்டிருக்கின்றனர்.. கடைசியாக கூட சிபி ராதாகிருஷ்ணனை குடியரசு துணை தலைவராக நிறுத்தி தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.. 4 ஆண்டுகால திமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு பூத் கமிட்டி தலைவர்கள், தொண்டர்களுக்கு இருக்கிறது.. நம் பொறுப்பை உணர்ந்து கடுமையாக பாடுபட்டு, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை கொண்டு வர வேண்டிய பொறுப்பு இருக்கிறது.. அதை செயல்படுத்த வேண்டும்..” என்று தெரிவித்தார்..