’என் உடலை இப்படி உருக்கியது இந்த நோய் தான்’..!! ரோபோ ஷங்கரே சொன்ன ஷாக்கிங் தகவல்.!!

உடல் எடை குறைந்தது குறித்து நடிகர் ரோபோ ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற சில நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர். தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களில் அவர் காமெடியனாக நடித்திருக்கிறார். ரோபோ ஷங்கர் சமீப காலத்தில் திடீரென உடல் மெலிந்துபோனது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவரது புகைப்படங்களை பார்த்து ‘என்ன தான் ஆச்சு அவருக்கு’ என ரசிகர்கள் சோகத்துடன் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் ரோபோ ஷங்கர் தனக்கு என்ன தான் ஆச்சு என கூறி இருக்கிறார். அதாவது, ”ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்கலாம் என டயட் இருந்தேன். ஆனால், அந்த நேரத்தில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து என் உடலை உருக்கிவிட்டது” என்றார். “ஆனால் நான் இறந்துவிட்டேன் என்று கூட சிலர் பொய்யாக எழுதுகிறார்கள்” என ரோபோ ஷங்கர் சோகத்துடன் பேசி இருக்கிறார்.

CHELLA

Next Post

 ஆத்தூரில் கிடைத்த மண் குவளை மூடியின் வயது 1890

Mon Jun 12 , 2023
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சுதாகர் சுப்பிரமணியம் தலைமையில் ஆய்வு மாணவர் திருப்பதி வெங்கடேஷ், பனை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் காட்சன் சாமுவேல், ஆத்தூர் ராஜசேகரபாண்டியன் என ஒரு குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆத்தூர் குளம் ஆழப்படுத்தும் பணி நடந்தது. அங்கு இந்த குழுவினர் […]
WhatsApp Image 2023 06 12 at 16.32.44

You May Like