ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவது மிகவும் கடினம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவது மிகவும் கடினம் என்று நேற்று அவர் கூறினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்த இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்ப் அழைப்பு விடுக்க முடியும் என்று ஈரான் கூறியது குறித்து ட்ர்ம்பிடம் கேட்டபோது, ”இப்போது அந்தக் கோரிக்கையை முன்வைப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக டிரம்ப் பேசியிருந்தாலும், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவது மிகவும் கடினம் என்று அவர் கூறினார். போர் அடிப்படையில் இஸ்ரேல் சிறப்பாக செயல்படுகிறது. ஈரான் குறைவாகவே செயல்படுகிறது என்று நீங்கள் கூறுவீர்கள். யாரையாவது நிறுத்தச் சொல்வது சற்று கடினம். ஆனால் நாங்கள் தயாராக, விருப்பத்துடன், திறமையுடன் இருக்கிறோம், நாங்கள் ஈரானுடன் பேசி வருகிறோம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என்று தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்று அமெரிக்கா நம்புவதாக தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் கூறியது தவறு என்றும் ட்ரம்ப் கூறினார். ஈரான் அணு ஆயுதங்களில் வேலை செய்யவில்லை என்று நம்புவதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் கூறியது குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு ட்ரம்ப், “ என் உளவுத்துறை சமூகம் தவறு. உளவுத்துறை சமூகத்தில் யார் அப்படிச் சொன்னார்கள்?” அது துளசி கப்பார்ட் என்று தெரிவிக்கப்பட்டபோது, டிரம்ப், “துளசி கப்பார்ட் சொன்னது தவறு” என்றார்.
இஸ்ரேல் உடனான மோதலில் ஈரானை நேரடியாக தாக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய டிரம்ப் கூடுதல் அவகாசம் கோரியுள்ளார். ஈரானின் ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டல் நிலையம் ஒரு மலையின் கீழ் புதைக்கப்பட்டுள்ளது. யுரேனியத்தை செறிவூட்ட பயன்படுத்தப்படுகிறது, ஒருவேளை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இருக்கலாம். மின் உற்பத்தி போன்ற குடிமக்கள் நோக்கங்களுக்காக ஈரானின் அணுசக்தி திறன்களை வளர்ப்பதிலும் ட்ரம்ப் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்றும் அது தங்களுக்கு ஆபத்து என்று கூறி ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் – ஈரான் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.