மிகுந்த மன வேதனை அளிக்கிறது.. தென்காசி பேருந்து விபத்து.. விஜய் இரங்கல்..!

TVK Vijay new

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், இந்த கோர விபத்து நடந்துள்ளது..

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 பேருந்துகளும் மோதி ஏற்பட்ட இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து கடையநல்லூர் பகுதி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்துக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.. அவரின் பதிவில் “ தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? மோடியிடம் இபிஎஸ் இதை கேட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

RUPA

Next Post

கருட புராணத்தின்படி இரவில் இதை செய்தால் சனியின் தாக்கத்தை தடுக்கலாம்..!

Mon Nov 24 , 2025
According to Garuda Purana, doing this at night can prevent the influence of Saturn..!
Garuda Puran 11zon

You May Like