ஐடி வேலை To பானிபூரி கடை..!! எவ்வளவு பணம், நகை கொடுத்தும் பத்தல..!! வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!!

Bangalore 2025

வரதட்சணை கொடுமைக்கு ஆளான கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள BTM Layout பகுதியில் கர்ப்பிணி ஷில்பா (வயது 28), தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷில்பாவுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, தனது மகளின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்று ஷில்பாவின் தாய் சாரதா போலீசில் புகாரளித்துள்ளார். அவர் கூறுகையில், மகளின் திருமணத்துக்காக சுமார் 30 லட்ச ரூபாய் செலவிடப்பட்டதோடு, 150 கிராம் தங்கம் கொடுத்தோம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, கணவன் பிரவீன் மற்றும் அவரது தாய் சாந்தவ்வா தொடர்ந்தும் கூடுதல் பணம் கேட்டு ஷில்பாவை பலமுறை கொடுமைப்படுத்தி தாக்குதல் நடத்தி வந்துள்ளனர்.

விசாரணையில், பிரபல ஐடி நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றியிருந்த பிரவீன், கடந்த ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பானி பூரி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. பிரவீன் தனது மனைவியை அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகவும், விருப்பம் இல்லாத சூழ்நிலையிலும் ரூ.5 லட்சம் வரை கொடுத்து சமாளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தொடர்ச்சியான மன அழுத்தத்தால், ஷில்பா தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

“என் மகள் இன்னும் சில வாரங்களில் குழந்தை பெற்றெடுக்க இருந்தாள். அவளது உயிரோடு காண வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால், அவளின் கணவன் மற்றும் மாமியாரின் கொடுமை காரணமாக இப்போது அவளை இழந்திருக்கிறோம்” என அவரது தாய் சாரதா வேதனை தெரிவித்துள்ளார்.

Read More : பெண்களே..!! நீங்களும் இனி முதலாளி ஆகலாம்..!! தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

உலகையே வியக்க வைத்த இந்தியாவின் பணக்கான பிச்சைக்காரர்.. சொத்து மதிப்பை கேட்டால் அசந்தே போவீர்கள்..!!

Fri Aug 29 , 2025
India's money-hungry beggar who surprised the world... If you ask him about his property value, you will be shocked..!!
begger

You May Like