அபிஷேக் பச்சனுடன் நடந்தது இரண்டாம் திருமணம் தான் என திரையுலகினர் பேசி வரும் நிலையில் முதல் திருமணத்தை பற்றிய தகவல்களும் கிசுகிசுக்கின்றன…
உலக அழகி பட்டத்தை வென்று சில வருடங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் இந்தியில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாகவும் பாலிவுட்டில் Bride & Prejudice என்ற படத்தில் நடித்து வந்தார். இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை 2007ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், விக்ரமின் ராவணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் நடித்தார். அப்படத்தை அடுத்து தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் திருமணம் குறித்த சில தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராயிற்கு அது முதல் திருமணம் கிடையாதாம். இரண்டாம் திருமணம் தான் செய்து கொண்டாராம். அதாவது, ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன் சல்மான்கானை காதலித்தது உண்மை. ஆனால் அது தோல்வியில் முடிந்து இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்தார்.
திருமண விசயம் எடுக்கும் போது ஐஸ்வர்யா ராயின் ஜாதகத்தை அவரது குடும்பம் அறிவுரை கேட்டு ஜோதிடர்கள் கேட்டுள்ளனர். ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் ஐஸ்வர்யா ராயிற்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் வாரணாசியில் கும்ப விவாகம் செய்யும் சடங்கை நடத்த சொல்லியுள்ளனர். அப்படி வாரணாசிக்கு சென்று ஐஸ்வர்யா ராயின் பக்கத்தில் மரம் ஒன்றினை வைத்து, தாலி கட்டியுள்ளனர்.
இந்த பரிகார பூஜை முடிந்த பிறகு தான் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சனின் இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இதை தான் ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாம் கல்யாணம் என்றும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று பாலிவுட்டில் ஒரு சர்ச்சையாக அப்போது பேசப்பட்டது.