தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான முதல் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை பொறுத்த வரையில், அடுத்த 2️ நாட்களுக்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்தோடு இருப்பதோடு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸ் எனவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது