கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது.. அதுக்குள்ள இன்னொருத்தியா..? ஆடிப்போன மனைவி..!! கடைசியில் திடீர் திருப்பம்..!!

Crime 2025 6

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த சிவானந்தா படிகார் (35) என்பவருக்கு ஜெயஸ்ரீ (30) என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சிவானந்தா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து, ஜெயஸ்ரீ தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால், கணவன் – மனைவி இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு சிவானந்தா தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், ஜெயஸ்ரீயின் பெற்றோர் சிவானந்தா தான், தங்களது மகளை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக போலீசாரிடம் புகாரளித்தார். அதன்பேரில், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : திருமணத்திற்கு முன்பே இப்படியா..? மாதம்பட்டி ரங்கராஜின் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய 2-வது மனைவி..!!

CHELLA

Next Post

மீண்டும் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த ஜியோ.. மலிவான ரீசார்ஜ் திட்டம் நிறுத்தம்! இப்ப சிறந்த ரீசார்ஜ் திட்டம் எது?

Wed Aug 20 , 2025
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மீண்டும் தனது பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மலிவான டேட்டா வழங்கும் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஜியோ நிறுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், ஜியோ தனது ரூ.249 திட்டத்தை நிறுத்தியுள்ளது. சமீபத்தில், மற்றொரு மலிவான திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மலிவான ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்பட்டதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். சமீபத்தில் ரூ.249 திட்டத்தை நிறுத்திய நிலையில், ஜியோ இப்போது ரூ.209 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது. […]
Jio Recharge Plans

You May Like