சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மீன்பண்ணையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் (Fisheries Assistant) பணியிடங்களை நிரப்ப மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விவரம்: மீன்வள உதவியாளர் காலிப்பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
- ஆதிதிராவிடர் (இருபாலர்) – 2 இடங்கள்
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் (இருபாலர்) – 1 இடம்
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் (பெண்) – 1 இடம்
- பிற்படுத்தப்பட்டோர் (பெண்) – 1 இடம்
- பிற்படுத்தப்பட்டோர் (இருபாலர்) – 1 இடம் (ஆதரவற்ற விதவை)
- பொதுப்போட்டி (பெண்) – 1 இடம்
- பொதுப்போட்டி (இருபாலர்) – 1 இடம் (கலப்பு திருமணம்)
பெண் விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் அதே இனச்சுழற்சியில் ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவர்.
என்னென்ன தகுதி?
- தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
- நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல், வலை வீசுதல், பழுதுபார்த்தல் போன்ற திறமைகள் அவசியம்.
- மீன்வளத் துறை அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிலையத்தில் சான்று பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
சம்பளம்: ₹15,900 – ₹58,500 (நிலை – 2)
வயது வரம்பு:
ஆதிதிராவிடர்: 37 வயதுக்குள்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர்: 34 வயதுக்குள்
இதர வகுப்பினர்: 32 வயதுக்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பம் சேர வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்),
எண்.5.596, ஔவையார் தெரு,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்,
தருமபுரி – 636705.



