தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செல்வதை அவர் விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஒரு அரசியல் என்பது 24 மணி நேரம் களத்தில் இருக்க வேண்டும்.. அது முழு நேர வேலை.. தவெக ஒரு மாற்றம் தரக்கூடிய கட்சி என்று சொல்கின்றனர்.. எனவே 24 மணி நேரம் அந்த கட்சி களத்தில் இருக்க வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் நினைக்கின்றனர்.. ஆனால் நான் சனிக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன், ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் பார்ப்பேன்.. பிரச்சாரத்திற்கு வருவேன்.. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி மற்ற நாட்களில் மக்களை பார்க்க மாட்டேன் என்று கூறுவது ஒரு புதிய அரசியல் கட்சிக்கு அழகல்ல..
மக்கள் இதை எல்லாவற்றையும் கவனிப்பார்கள்.. திமுகவிற்கு நாங்கள் தான் எதிரி என்று பறை சாற்றும் தவெக அந்த வேகத்தை மக்களிடம் காட்ட வேண்டும். அப்போது தான் மக்கள் நம்புவார்கள்..
இன்று ஏன் திமுகவுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணி என்று மக்கள் நம்புகிறார்கள் என்றால், எங்கள் கூட்டணி தலைவர்கள் முழு நேரமும், எப்போதும் களத்தில் இருக்கின்றனர்.. தவெகவை பொறுத்த வரை, நாங்கள் தான் மாற்று என்று சொல்கிறார்கள் எனில் அவர்கள் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மக்களுக்கு அணுகக்கூடிய வகையில் இருந்தால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
நான் வீக் எண்ட் மட்டும் தான் மக்களை பார்ப்பேன் என்று ஒரு தலைவர் சொன்னால், எந்தளவுக்கு சீரியஸாக இவர்கள் அரசியல் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ தவெகவுக்கு மட்டும் காவல்துறை மறுக்கவில்லை.. பாஜகவின் யாத்திரைக்கும் அவர்கள் மறுப்பு தெரிவித்தார்.. தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பது என்பது வழக்கமான ஒன்று தான்.. நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கலாம்.. ஆனால் இதனால் திமுக எங்களை பார்த்து பயந்துவிட்டது என்று விஜய் கூறுவது ஏற்புடையதல்ல..
திமுக தவெகவை பார்த்து எப்போது பயப்பாடுவர்கள் என்றால் அவர்கள் 24 மணி நேரமும் களத்தில் இருக்கும் போது தான்.. எனவே காவல்துறையை, திமுக மீது பழி போடுவதை நான் ரசிக்கவில்லை.. களத்தில் 24 மணி நேரமும் தீவிரமாக இருக்க வேண்டும். காவல்துறை ஒரு இடத்தில் அனுமதி கொடுகவில்லை எனில் வேறு இடத்தில் வைக்கலாம்.. இங்கு வரும் மக்கள் அங்கு வரமாட்டார்களா? தீவிர அரசியலில் இருப்பவர்கள் முழு நேரமும் களத்தில் இருக்க வேண்டும். அது மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பு..” என்று தெரிவித்தார்..