பெற்ற மகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது 3-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் 13 வயது மாணவி. இவர், விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி விடுமுறையின்போது தனது குடும்பத்தை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை அவரது தாயும், அவரது மூன்றாவது கணவரும் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும், தன்னை பல ஆண்கள் பலாத்காரம் செய்ததாகவும் தனது பள்ளி ஆசிரியைகளிடம் மாணவி கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மேல்மருவத்தூர் காவல் நிலையம் மற்றும் குழந்தைகள் உதவி மையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்ததன் பேரின், போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. போலீசாரின் விசாரணையில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாயாருக்கு பல ஆண்களுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. அவர் தற்போது 3-வது கணவருடன் வாழ்ந்து வருகிறார். அவரும் தன்னுடைய கள்ளக்காதலியின் மகளான 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
ஒரு கட்டத்தில் மனமுடைந்து போன மாணவி, தாயின் கொடுமை தாங்க முடியாமல், ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். இங்கு நிம்மதியாக இருந்த மாணவியை ஃபோன் போட்டு ஆசையாக பேசி விடுமுறை நாட்களில் மீண்டும் வீட்டிற்கு வருமாறு பேசியுள்ளார் அவரது தாய். இதை நம்பிச் சென்ற சிறுமியை வலுக்கட்டாயமாக மீண்டும் விபச்சாரத்தில் தள்ளிவிட்டுள்ளனர்.
இதற்காக மதுராந்தகத்தில் ரூம் எடுத்து, வாடிக்கையாளர்களை வரவழைத்துள்ளனர். பின்னர், மாணவியுடன் உல்லாசமாக இருந்து அதில் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இவ்வாறு பல ஆண்கள், மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இப்படி, விடுமுறை நாட்களில் மாணவியை ஊருக்கு வரவழைத்து தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இச்சம்பவத்தை கேட்டு ஆடிப்போன காவல்துறையினர், பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய குற்றத்திற்காக மாணவியின் தாய், அவரது மூன்றாவது கணவர் மற்றும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நண்பன் என 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த கொடுமையால் பாதிக்கப்பட்ட 9ஆம் வகுப்பு மாணவி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் செங்கல்பட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கல்லூரி மாணவனுடன் உல்லாசம்..!! ஹாஸ்டலில் 21 வயது மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!