சிம்பிள் லாஜிக் தான்.. இதை செய்தாலே நாம் வெற்றி பெற முடியும்.. தவெக நிகழ்ச்சியில் விஜய் நம்பிக்கை..

24 67208f1b7fd84

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்..


அந்த வகையில் தவெகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த My Tvk என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார்.. அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்..

இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ 1967, 1977 தேர்தல் மாதிரி 2026 தேர்தலும் அமையப் போகிறது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.. இந்த 2 மாபெரும் தேர்தல்களில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டவர்களின் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்து தான் புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றனர்.. இந்த வெற்றிக்கு சிம்பிள் லாஜிக் தான் காரணம்.. ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என எல்லா மக்களை சந்தித்தனர்.. இதுவே வெற்றிக்கு காரணம். நாமும் இதை சரியாக செய்தாலே போதும்.. எல்லாக் குடும்பங்களையும் உறுப்பினராக சேர்த்து நம்மால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்..

அதனால் இந்த செயலியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இதை தொட்ர்ந்து மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களுடன் மக்களாக இருக்கப் போகிறோம்.. நாம் இருக்கிறோம்.. நம்முடன் மக்கள் இருக்கிறார்கள்.. நல்லதே நடக்கும்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்.

RUPA

Next Post

கவனம்.. சார்ஜ் போட்ட போது வெடிகுண்டு போல் வெடித்த செல்போன்.. இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க..

Wed Jul 30 , 2025
சமீபத்தில் ஒரு Google Pixel 6a ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது திடீரென வெடித்து சிதறியதாக ரெடிட்டில் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.. சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில் ஒரு Google Pixel 6a ஸ்மார்போன் சார்ஜ் செய்யும் போது திடீரென வெடித்து சிதறியதாக ரெடிட்டில் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.. இரவு நேரத்தில் போனை சார்ஜ் செய்து விட்டு தூங்கிய போது […]
MOB blast V jpg 442x260 4g 1

You May Like