மீண்டும் திமுக ஆட்சி தான்.. தவெகவுக்கு எந்த இடம்..? அதிமுக சறுக்கியது ஏன்..? பரபர சர்வே முடிவுகள்..!

MK Stalin EPS Vijay

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..


முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சார்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனிடையே 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன..

இந்த நிலையில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு Poll Tracker என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.. அதன்படி 2026 தேர்தலில் திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை தக்க வைக்கும் என்று Poll Tracker அமைப்பு கணித்துள்ளது.. திமுக 172-178 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக Poll Tracker கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.. திமுகவுக்கு 40% வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பரவலாக இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக 46 முதல் 52 தொகுதிகளை கைப்பற்றும், அதிமுக கூட்டணி 3.03 % வாக்குகளை பெறும் என்றும் Poll Tracker கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் விஜய்யின் தவெக 6 – 12 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தவெக வாக்கு சதவீதம் 19.2% வாக்குகளை கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் சீமானின் நாம் தமிழர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனவும், நாம் தமிழர் கட்சி 5.1% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிறக் கட்சிகள் 2.% வாக்குகளை பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சங்கள் இதோ :

Poll Tracker கருத்துக்கணிப்பில் “ தமிழ்நாட்டின் வாக்காளர்களில் ஒரு பகுதியினரிடையே, நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மீதான ஒருவித சந்தேகம் நிலவுகிறது…

ராமதாஸ் மற்றும் சசிகலா போன்ற தலைவர்களின் செயல்பாடுகள் காரணமாக, அதிமுக-பாமக கூட்டணி தனது வாக்காளர் தளத்தின் ஒரு பகுதியை இழந்து வருகிறது; அரசுக்கு எதிரான மனநிலை அக்கூட்டணிக்குச் சாதகமாக அமைந்திருந்தாலும், இத்தலைவர்களின் செயல்பாடுகள் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

வாக்காளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் ஆகியோருடன் ஒப்பிடுகையில், மு.க. ஸ்டாலின் மிகவும் பரிச்சயமான மற்றும் நன்கு நிலைபெற்ற ஒரு தலைவராகவே பார்க்கப்படுகிறார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பின்னணிகளையும் கொண்ட வாக்காளர்களிடையே, தவெக கட்சி தற்போது ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்று வருகிறது. அதே வேளையில், திமுக அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள், பெண்களின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பதற்கு திமுகவுக்கு பெருமளவு உதவுகிறது.. இதன் விளைவாக, திமுகவின் வாக்காளர் தளத்தை விட, அதிமுகவின் வாக்காளர்களிடையே தவெகவின் தாக்கம் அதிகமாக இருக்கும்..

தற்போதைய நிலையில், அதிமுக கூட்டணியுடன் ஒப்பிடுகையில், திமுக கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. மேற்கு (கொங்கு) மண்டலத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட திமுக இந்த முறை சற்றுச் சிறப்பாகச் செயல்படக்கூடும்.

டெல்டா மண்டலத்தில் அக்கட்சியின் நிலைத்தன்மை மாறாமல் இருக்கும் என்றும், தென் மண்டலத்தில் கடந்த தேர்தலை விடச்சற்று கூடுதலான வெற்றிகளைப் பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வாக்காளர்களிடையே, நாம் தமிழர் கட்சி பக்கம் சாய்ந்திருந்த சில வாக்காளர்கள் தற்போது தவெகவை நோக்கித் திரும்பிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன; இது நான் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தில் படிப்படியான சரிவை ஏற்படுத்தக்கூடும்.

அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிருப்திகள் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.. சில கட்சி நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர் என்பதோடு, வேறு சில உறுப்பினர்கள் கட்சியின் தலைமை மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகள், அதிமுகவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகளை பாதித்து வருகின்றன..

அதிமுக தலைவர்களில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே களத்தில் தீவிரமாகச் செயல்படும் ஒரே தலைவராகத் தென்படுகிறார்; மற்ற கட்சித் தலைவர்கள் பெரும்பாலும் களத்தில் தென்படாத நிலை உள்ளது. இதுவே அக்கட்சியின் அரசியல் வேகம் மந்தமடைவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..!

RUPA

Next Post

தவெக தலைவர் விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் அதிர்ச்சி தகவல்!

Fri Apr 3 , 2026
2 criminal cases against TVK leader Vijay.. Shocking information in Trichy East nomination!
tvk vijay namakkal

You May Like