ஜெயலலிதாவுக்கு மகள் இருந்தது உண்மை தான் என்று பிரபல மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
எம்ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த மகள் என்று கூறி கேரளாவை சேர்ந்த சுனிதா என்ற பெண் 2 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார்.. இந்த அடிப்படையில் அவர்களின் சொத்துகளில் எனது பங்கிற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தான் ஜெயலலிதா – எம்.ஜி.ஆருக்கு பிறந்த மகள் என்றும்.. டிஎன்.ஏ பரிசோதனை செய்ததில் நான் ஜெயலலிதாவின் மகள் என தெரியவந்தது என்றும் அவர் கூறினார். மேலும் சூழ்நிலை காரணமக நான் ரகசியமாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவை பார்ப்பேன் என்றும் அந்த பெண் கூறியிருந்தார்..
இந்த நிலையில் பிரபல மருத்துவர் காந்தராஜ் இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக பலரும் புதிய கதைகளை கிளப்பி வருகின்றனர்.. இதெல்லாம் சுத்த பொய்.. இனிமேலும் 100 பேர் வருவார்கள்.. விளம்பத்திற்காக இதை செய்கின்றனர்.. ஜெயலலிதா மகள் என்று இந்த பெண் கூறுவது சுத்தப்பொய்.. டிஎன்.ஏ சோதனை எல்லாம் இப்போது மருத்துவர்களை மிரட்டி வாங்கிவிடலாம்.. எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் என்று கூறுவது வாய்ப்பே இல்லை.. அந்த பெண் ஒரு ஃபிராடு.. அந்த பெண் வழக்கு போட்டாலும் நான் பார்த்துக் கொள்கின்றேன்..
ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் இருந்தது உண்மை.. அதை பார்த்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.. போயஸ் கார்டனில் அந்த குழந்தையை நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள்.. சில பல காரணங்களால் ஹைதராபாத்தில் திராட்சை தோட்டத்தை வாங்கி, அங்கு வீடு கட்டி அந்த பெண்ணை அங்கு வளர்த்தனர்.. சசிகலாவின் சகோதரர் மாரிமுத்து என்பவர், திராட்சை தோட்டத்தையும், ஜெயலலிதாவின் மகளையும் பார்த்துக் கொண்டார். அந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தையும் உண்டு..
சசிகலாவின் சகோதரரும், ஜெயலலிதாவின் மருமகனும் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டனர்.. இது அப்போது ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கு தெரியும்.. கலைஞருக்கும் இந்த விஷயம் தெரியும்.. இதை நான் சொன்ன போது எனக்கு பெரிய இடத்தில் இருந்து மிரட்டல் வந்தது.. எனக்கு தெரிந்த உண்மையை நான் சொல்கிறேன்.. ஜெயலலிதா மகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதெல்லாம் நிறைய கதைகளை சொல்லி பலர் கிளம்பி வருவார்கள்.. இதெல்லாம் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே.. எல்லாரும் விளம்பத்திற்கு அலைய ஆரம்பித்து விட்டனர்.. இவ்வளவு விஷயங்கள் வெளியே வருவதற்கு இது தான் காரணம்.. யாரோ ஒரு பெண் எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்லும் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்..” என்று தெரிவித்தார்.
Read More : சரோஜா தேவியின் கடைசி ஆசை நிறைவேறியது.. இறந்த பிறகும் உலகை பார்க்கப் போகிறார்.. நெகிழ்ச்சி சம்பவம்..