தவெக மாநாட்டில் விஜய் நீண்ட உரையாற்றினார்.. அப்போது “ பாஜக – அதிமுக கூட்டணி பொருந்தா கூட்டணி.. இந்த கூட்டணி இருப்பதால் இங்கு இருக்கும் வெற்று விளம்பர திமுக அரசு பாஜகவுடன் உள்ளுக்குள் உறவை வைத்துக் கொண்டு, வெளியில் எதிர்ப்பது போல் நடிப்பது என ஏமாற்றி வருகிறது.. எதிர்க்கட்சியாக இருந்தால் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.. ரெய்டு என்றால் டெல்லிக்கு செல்கிறார்கள்.. ஸ்டாலின் அங்கிள்.. வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்.. தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் ஆட்சியை பார்த்து நாம் எப்படி சும்மா இருக்க முடியும்.. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அது கபட நாடக மு.க. ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க அங்கிள்..
நீங்க நடத்தும் ஆட்சியில் நேர்மை இருக்கா? ஊழல் இல்லாம இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா? பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா? சொல்லுங்க அங்கிள் சொல்லுங்க.. பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்தால் போதுமா? படிக்கும், வேலைக்கு, செல்லும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என்று பெண்கள் கதறுகிறார்கள்.. அந்த சத்தம் உங்களுக்கு கேட்குதா? வாட் அங்கிள்? இட்ஸ் வெரி, வெரி ராங்..
பெண்களை மட்டுமா ஏமாத்துறீங்க.. அரசு ஊழியர்களை, ஆசிரியர்கள், விவசாயிகளை, மீனவர்களை ஏமாத்துறீங்க.. வெரி வெரி ஒர்ஸ்ட் அங்கிள்.. எப்படி கேட்டாலும் இவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.. ஏன்னா பதில் இருந்தாலும்.. செய்வோம், செய்வோம் என்று சொன்னார்களே.. சொன்னதெல்லாம் செஞ்சாங்களா? மை டியர் அங்கிள் மக்களின் சத்தம் கேட்குதா? இந்த சாதாரண முழக்கம், இடி முழக்கமாக மாறும், அது போர் முழக்கமாக மாறும்.. அந்த போர் முழக்கம் உங்களை தூங்கவிடாது.. நடக்கிறதா இல்லையா என்று பாருங்க.. 2026 தேர்தலில் இந்த திமுகவின் கபட நாடக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புறோம்..” என்று தெரிவித்தார்..