முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜானிக் சின்னர்!. விஜய் ஸ்டைலில் வைரலாகும் பதிவு!

Jannik Sinner wins Wimbledon title 11zon

உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற நிலையில், நடிகர் விஜய் ஸ்டைலில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சரிவில் இருந்து மீண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதனையடுத்து விம்பிள்டனின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், “விம்பிள்டன் நாயகன்’ என்ற தலைப்பில் ஜானிக் சின்னர் கோப்பையுடன் மக்களிடம் செல்பி எடுப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் விஜய் மக்களிடம் செல்பி எடுப்பது போன்ற போஸ்டரை ரெபரென்ஸாக பயன்படுத்தி இந்த போஸ்டரை விம்பிள்டன் வடிவமைத்துள்ளது. இந்த போஸ்டர் தமிழ்நாட்டில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Readmore: மைதானத்தில் மலர்ந்த காதல்!. சாய்னா நேவால் விவாகரத்து!. 7 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!.

KOKILA

Next Post

ஷாக்!. நிபா வைரஸால் கேரளாவில் 2வது மரணம்!. 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!. கண்காணிப்பு தீவிரம்!.

Mon Jul 14 , 2025
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது நபர் இறந்ததைத் தொடர்ந்து, கேரளாவில் நிபா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வவ்வால்கள் மூலம் இந்த வகை வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ நோய் தொற்று ஏற்படும். […]
Why Is Nipah Virus In News

You May Like