ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் தேதி அறிவிப்பு.. ஒரே நாளில் அடுத்தடுத்த அப்டேட்.. குஷியில் விஜய் ரசிகர்கள்..

jananayagan

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்..


அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

இந்த படத்தை கேவிஎன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

முன்னதாக இன்று மதியம் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வரும் 8-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.. இன்று ஒரே நாளில் பேக் டூ பேக் அப்டேட்களை வெளியிட்டதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் ஜனநாயகன் படத்தின் பாடலுக்காக ஆவலாக காத்திருக்கின்றனர்..

Read More : பயணிகளே உஷார்.. ரயிலில் இந்த தவறுகளைச் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.. விதிகளை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

RUPA

Next Post

Breaking : ”நான் விஜய்க்கு எதிராக பேசவில்லை.. ரசிகர்களை நாம் எப்படி குறை சொல்ல முடியும்..” அஜித் பரபரப்பு அறிக்கை..!

Thu Nov 6 , 2025
கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் சமீபத்தில் பேசியிருந்தார்.. நடந்த சம்பவத்திற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் ஊடகங்களின் மனநிலை மாற வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.. இவ்வளவு மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கூட்டம் கூட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை என்றும் அவர் பேசியிருந்தார்.. இதையடுத்து அஜித் விஜய்க்கு ஆதரவளித்தாக விஜய் ரசிகர்களும், விஜய்யை விமர்சித்துள்ளார் என்று ஒரு தரப்பினரும் கூறி வந்தனர்.. இந்த நிலையில் […]
Ajith Vijay 2025

You May Like