கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தவெகவினரையும் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. இந்த நிலையில் சினிமா விமர்சகர் சேகுவேரா விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ கரூர் சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான தவெக தலைவரையும் இதுவரை கரூருக்கு செல்லாத விஜய்யையும் கடுமையாக விமர்சித்தார்..
மேலும் “ கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு தவெகவினர் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.. சமூக வலைதளங்களில் கரூரில் நடந்தது சதி என்று கூறிய தவெகவினர் நீதிமன்றத்தில் விபத்து என்று கூறிவிட்டனர்.. ஆனால் நீதிமன்றம் இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று கூறிவிட்டது..” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நடிகைகளுக்காக விஜய் தனது வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக தெரிவித்தார்.. மேலும் “ விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில், அம்மாவுக்கு துரோகம் செய்யும் அப்பாவின் சட்டையை பிடித்து கேள்வி கேட்பது போல் காட்சி இருக்கும்.. இது படத்தில் காட்சி.. ஆனால் நிஜத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் சட்டையை பிடித்துவிட்டார்.. 2 நடிகைக்கு மாமா வேலை பார்த்தவர் தான் இந்த ஜெகதீஷ்.. அப்போது தான் என் குடும்பத்தையே கெடுத்துவிட்டாயா என்று ஜேசன் ஜெகதீஷ் சட்டையை பிடித்து கேள்வி கேட்டார்.. விஜய் சினிமாவில் செய்ததை தான் மகன் நிஜத்தில் செய்தார்.. ஆனால் விஜய், 2 நடிகைகளுக்காக தனது மகனையே வீட்டை விட்டு அனுப்பிவிட்டார். அன்று வீட்டை விட்டு வெளியே போன் ஜேசன் இன்று வரை திரும்பவில்லை.
நியாயமாக விஜய்யின் தந்தை இதை செய்திருக்க வேண்டும்.. ஆனால் விஜய்யின் மகன் செய்துவிட்டார்.. விஜய் குடும்பத்திற்கும் சரியாக நடந்து கொள்ளவில்லை.. மக்களுக்கும் சரியாக இல்லை.. விஜய் எல்லாம் தேர்தலில் வெற்றி பெறவே முடியாது.. பாதிக்கப்பட்ட மக்களை ஏன் பார்க்கவில்லை என்று கேட்டால், அனுமதி கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். நீங்கள் எங்கு முதலில் அனுமதி கேட்டீர்கள்..
விஜய்க்கு கரூர் செல்ல பயம்.. அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து ஒருவரின் குரல் வந்தால் விஜய்யின் நிலை என்ன ஆகும்? அதற்கு பயந்து தான் விஜய் அங்கு செல்லாமல் உள்ளார்.. இந்தியாவில் இனி எந்த நடிகரும் ஆட்சியமைக்கவே முடியாது.. அதற்காக வேண்டுமானால் விஜய்க்கு நன்றி சொல்லலாம்..” என்று தெரிவித்தார்.
Read More : படப்பிடிப்பில் பாலியல் துன்புறுத்தல்.. நடிகை பரபரப்பு புகார்.. பிரபல கன்னட நடிகர் கைது!



