பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி திமுக அரசை கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக ஆட்சியில் ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை.. வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த திமுக அது எதையும் நிறைவேற்றவில்லை.. தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.. தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.. இதை குழந்தை கூட அறியும்.. ஊழல் நிறைந்த திமுக ஆட்சி ஜனநாநாயகத்திற்கு எதிரான் ஆட்சி.. திமுக அரசு 4 வழிகளில் செயல்படுகிறது.. குடும்ப ஆட்சி, ஊழல் பாதை, பெண்களை வசைபாடுவது, கலாச்சாரத்தை வசைபாடி திமுக வளர்கிறது.
காங்கிரஸ் – திமுக ஆட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது.. தமிழ்நாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடியை எங்கள் அரசு கொடுத்திருக்கிறது.. ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்கிறது.. காங்கிரஸை விட பாஜக ஆட்சிக்கு வந்த பின் 7 மடங்கு அதிகமாக ரயில் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன..
என்.டி.ஏ ஆட்சியில் விவசாயிகள் கௌரவக் கொடை திட்டத்தில் ரூ.4 லட்சம் கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.. கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை மத்திய அரசு ஆற்றி உள்ளது.. ஆனால் இங்கிருக்கும் திமுக அரசாங்கம், இளைஞர்களை போதை பொருள் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.. பள்ளி, கல்லூரிகளை குறிவைத்து போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது.. தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தைகள் நாசமாவதை பார்த்து பெற்றோர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. போதை பொருள் மாஃபியாக்கள் திமுக ஆட்சியில் செழிப்பாக இருக்கிறது.. போதை பொருள் குறைய வேண்டுமெனில் என்.டி.ஏவுக்கு வாக்களிக்க வேண்டும்.. எண்டி.ஏ கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் போதைப் பொருளை தடுப்பதற்கான முற்றுப்புள்ளி ஆகும்.. தமிழ்நாட்டில் திமுகவினருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு இரட்டை எஞ்சின் ஆட்சி தேவை. ஜெயலலிதா குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றினார்.. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு.. இங்குள்ள பெண்கள் என்.டி.ஏ ஆட்சியை அமைத்து தந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்..” என்று தெரிவித்தார்..



