தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன் தள்ளுபடி குறித்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களின் பட்டியலைத் துல்லியமாகத் தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாவட்ட வாரியாக எவ்வளவு கடன் நிலுவையில் உள்ளது, எத்தனைப் பயனாளிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்பது குறித்த விரிவான தரவுகளைச் சேகரிக்கும் பணி ரகசியமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுமே இந்த நகைக் கடன் விவகாரத்தைத் தங்களது தேர்தல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றன. வரும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகள் மற்றும் விவசாயிகளைக் கவரும் வகையில் நிபந்தனையற்ற நகைக் கடன் தள்ளுபடி குறித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை இடம்பெற செய்ய இரு கட்சிகளுமே மல்லுக்கட்டி வருகின்றன. கடந்த காலத் தேர்தல்களிலும் நகைக் கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த முறையும் அதே பாணியைப் பின்பற்ற அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
Read More : ரூ.200 லட்சம் கோடியை தொட்ட இந்தியாவின் கடன்..!! வட்டி மட்டுமே இவ்வளவா..? பட்ஜெட் சொல்லும் பகீர் தகவல்..!!



