குஷியில் நகைப்பிரியர்கள்..! இன்றும் மளமளவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ..73,400க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த வாரத்தில் மட்டும் ரூ.1200-க்கு மேல் விலை குறைந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.9,180-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.440 குறைந்து, ரூ..73,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல், இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது… இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி இந்த அளவை விட அதிக லக்கேஜ் எடுத்து சென்றால் அபராதம்..!

English Summary

In Chennai today, the price of gold fell by Rs. 440 per sovereign and is being sold at Rs. 73,400.

RUPA

Next Post

முதலமைச்சரின் சகோதரர் மு.க. தமிழரசு அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!! என்ன ஆச்சு..?

Wed Aug 20 , 2025
M.K.Tamilarasu admitted to Apollo Hospital..!! What happened..?
mk stalin mk thamilarasu 30 01 25

You May Like