புதுச்சேரியில் அமைந்துள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) பல்துறை சீனியர் ரெசிடண்ட் பதவிகளுக்கு 66 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணியிடங்களுக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியின் விவரங்கள்: அனஸ்தீசியாலஜி, கிரிடிகல் கேர், அவசர சிகிச்சை, பொது மருத்துவம், மைக்ரோபயோலாஜி, குழந்தைகள் மருத்துவம், கிளினிக்கல் இம்யூனாலஜி, நியோனாட்டாலஜி, நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்ட பல்துறைகள்.
தகுதிகள்:
* MD/ MS/ DNB முதுகலை மருத்துவப் படிப்பை முடித்திருக்க வேண்டும்
* விண்ணப்பதாரர்கள் 03.11.2025 தேதியின்படி 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* SC/ST: 5 வருட தளர்வு
* OBC: 3 வருட தளர்வு
* மாற்றுத்திறனாளிகள்: 10–15 வருட தளர்வு
சம்பளம்: தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் 7வது CPC அடிப்படையில் ரூ. 67,700 அடிப்படை சம்பளம் பெறுவர், இதனுடன் மேலதிக செலவினங்கள் இணைக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
- நேர்காணல் நவம்பர் 7 மற்றும் 8, 2025 அன்று நடைபெறும்.
- தகுதியுள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது..? விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் https://jipmer.edu.in/announcement/jobs என்ற இணைப்பில் உள்ள கூகுள் படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.500 (SC/ST: ரூ.250, மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லாது)
விண்ணப்பம் நவம்பர் 3, 2025 மாலை 4:30 மணிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணலுக்கு செல்ல அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த வாய்ப்பு, பல்துறை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான சிறந்த வேலை வாய்ப்பாகும்.



