இந்திய இலக்கதியத்துக்காக வழங்கப்பட்டு உயிரிய விருதான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
தனக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ இந்திய இலக்கத்தின் நோபல் பரிசு என்று அறிவுலகத்தால் கருதப்ப்டும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. இதுவரை தமிழ்பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. இப்போது தான் ஞானபீடம் தமிழ்க் கவிதைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்ற குறை என்னால் கழிந்தது. என்னை வளர்த்த தமிழ் சமூகத்தை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.
மண்ணுக்கும் மக்களுக்கும் ஞானபீட விருதை காணிக்கையாக்குகிறேன்.. ஞானபீட விருது இலக்கத்துக்கு பெரிதும் பெரிது. தமிழுக்கு அரிதினும் அரிது. ஞானபீட விருது என் வயதை குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.
1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கவிஞராக இருக்கும் வைரமுத்து இதுவரை 8000 பாடல்களை எழுதி உள்ளார்.. 7 முறை தேசிய விருது பெற்ற ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதையும் 6 முறை வென்றவரும் கவிஞர் வைரமுத்து மட்டும் தான்.
கவிஞர் வைரத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் 2003-ல் சாகித்ய அகாசமி விருது பெற்றது. கள்ளிக்காட்டு இதிகாசம் இதுவரை 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.



