இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. ரூ.1,40,000 சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

jobs at airport

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:

ஜூனியர் நிர்வாகி (Architecture) – 11
ஜூனியர் நிர்வாகி (Engineering‐ Civil)- 199
ஜூனியர் நிர்வாகி (Engineering Electrical) – 208
ஜூனியர் நிர்வாகி (Electronics) – 527
ஜூனியர் நிர்வாகி (Information Technology) – 31
மொத்தம் – 976 பணியிடங்கள்

வயது வரம்பு: 27.09.2025 தேதியின்படி, அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் வயது வரம்பு தளர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி:

  • விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கட்டிடக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன், கணினி அறிவியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • முதல் முறை பணிக்கு செல்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதே போன்று, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: குரூப்-பி பிரிவில் ஜூனியர் நிர்வாகி பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் அதிகபடியாக ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஜூனியர் நிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கேட் தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? AAI ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள இளைஞர்கள் https://www.aai.aero/en/careers/recruitment/Offical என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாலிகள், தொழிற்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 28 முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 21 வயதில் ரூ.70 லட்சம் கிடைக்கும்.. பெண் குழந்தைகளுக்கான பொன்னான சேமிப்பு திட்டம்..!! உடனே சேருங்க..

English Summary

Job at Airports Authority of India.. Salary of Rs.1,40,000.. Don’t miss it..!!

Next Post

இந்த ஜூஸை தினமும் குடித்தால் போதும்.. கொழுப்பு கல்லீரல்.. முதல் மாரடைப்பு வரை அனைத்தும் மறைந்துவிடும்..

Mon Aug 11 , 2025
பழங்கள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சில விஷயங்கள் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும். குறிப்பாக நான் இப்போது பேசப்போகும் ஒரு பழம்.. தற்போது அனைவரும் எதிர்கொள்ளும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையிலிருந்து.. மாரடைப்பு வரை.. இது அனைத்து பிரச்சனைகளையும் சரிபார்க்கிறது.. தற்போதைய தலைமுறை அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், முதலில் நினைவுக்கு வருவது கொழுப்பு கல்லீரல் மற்றும் வெப்ப பக்கவாதம். ஆனால் இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு பழம் ஒரு […]
saathukudi

You May Like