பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) காஜியாபாத் கிளை ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 52 திட்ட பொறியாளர் (Project Engineer) பணியிடங்கள் மூன்று பொறியியல் பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
- எலெக்ட்ரிக்கல் – 40
- கணினி அறிவியல் – 8
- மெக்கானிக்கல் – 4
வயது வரம்பு: விண்ணப்பதார்களுக்கு அதிகபடியான வயது வரம்பு என்பது 32 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பின்பற்றப்படும்.
கல்வித்தகுதி: பாரத் எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல் மற்றும் மெக்கானிக்கல் ஆகியவற்றை சார்ந்த பாடப்பிரிவில் 4 ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு (B.E/B.Tech) அல்லது இளங்கலை அறிவியல் (B.Sc) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இப்பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வுடன் கூடிய சம்பளம் வழங்கப்படும் என BEL அறிவித்துள்ளது. அதன்படி:
முதல் ஆண்டு: ₹40,000
இரண்டாம் ஆண்டு: ₹45,000
மூன்றாம் ஆண்டு: ₹50,000
நான்காம் ஆண்டு: ₹55,000
இதற்குடன், மாதாந்திர சம்பளத்தில் இருந்து 10% கூடுதல் செலவினத் தொகை (Allowance) வழங்கப்படும். மேலும், பணியாளர்களுக்கான காப்பீடு மற்றும் பிற செலவுகளுக்காக ஆண்டுக்கு ஒருமுறை ₹12,000 வழங்கப்படுமெனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
- இந்தப் பணிக்கான தேர்வு நடைமுறை உத்தரப் பிரதேசம், காஜியாபாத் பகுதியில் உள்ள BEL கிளையில் நவம்பர் 24ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
- விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் நேரில் ஹாஜராக வேண்டும்.
- முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
- எழுத்துத் தேர்வு – 85%
- நேர்காணல் – 15%
- இரண்டும் இணைந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
- தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல் கட்டமாக 3 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்படும்.
- தேவையின் அடிப்படையில், பணிக்காலம் மேலும் ஒரு வருடம் கூடுதலாக நீட்டிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இந்தப் பணிக்கான நேரடி தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்துகொள்ள விரும்பும் பொறியாளர்கள், முதலில் BEL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் bel-india.in மூலம் நவம்பர் 20 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்யவும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த பின், இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்ப வேண்டும். அதன் பிறகு, தேவையான அனைத்து சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்களை இணைத்து, நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் நேரடி தேர்வுக்கு வரும்போது அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும்.



