சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ அமைப்பு பணிக்காக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்:
தொழில்நுட்ப வியலாளர் (Technician): RS, மின் மற்றும் மேலாண்மை, இழுவை, சிக் & PSD, டெலி & AFC, சிவில் & தடம்
மேற்பார்வையாளர் (Supervisor): செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு
வயது வரம்பு: இப்பணிக்கு 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு விதிகளின்படி விண்ணப்பதார்களுக்கு தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி:
டெக்னீஷியன் பதவிக்கான தகுதி: 10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்குப் பிறகு, கீழ்க்காணும் தொழிற்பிரிவுகளில் அரசு அல்லது அரசு உதவி பெறும் ஐடிஐ (NCVT/SCVT) கல்வி நிறுவனத்தில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்:
- எலெக்ட்ரிஷியன்
- எலெக்ட்ரிக்கல்
- மெக்கானிக்கல்
- பிட்டர்
- மெக்கானிக்
- தகவல் கம்யூனிகேஷன்
- தகவல் தொழில்நுட்பம்
- கம்பியூட்டர் ஹார்ட்வேர் & நெட்வொர்க் மெயிண்டனன்ஸ்
- பவர் எலெக்ட்ரிக்கல்
- பிளம்பர்
- வெல்டர்
- கார்ப்பெண்டர்
மேற்பார்வையாளர் (Supervisor) பதவிக்கான தகுதி: தமிழ்நாடு அரசு அல்லது அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்பியூட்டர், தகவல் தொழில்நுட்பம், ஐடி, கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தனியார் ஐடிஐ அல்லது தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்:
- டெக்னீஷியன்: மாதம் ரூ.27,014
- மேற்பார்வையாளர்: மாதம் ரூ.30,000
- மேலும் PF பங்களிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஆவணச் சரிபார்ப்பு மற்றும் தேர்வு மூலமாகவே நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் திறனில் தேர்ச்சி பெற வேண்டும்.
10-ம் வகுப்பில் தமிழ் பாடமாக படித்தவர்கள், தமிழ் திறன்தேர்விலிருந்து விலக்கு பெறுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வானவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். குறிப்பாக, லேசிக் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இப்பணிக்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி நேர்காணல்
* டெக்னீஷியன் பதவிக்கு சென்னையில் நவம்பர் 6 மற்றும் 7, கோயம்புத்தூரில் நவம்பர் 11, மதுரையில் நவம்பர் 14-ம் தேதி நேர்காணல் நடைபெறும்.
* மேற்பார்வையாளர் பதவிக்கு சென்னையில் நவம்பர் 4 மற்றும் 5, கோயம்புத்தூரில் நவம்பர் 10, மதுரையில் நவம்பர் 13 ஆகிய நாட்களில் நேர்காணல் நடைபெறும்.
Read more: Flash : ஷாக்.. இன்று மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?



