திண்டுக்கல் மாவட்டத்தில் 2025–26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் (TNSRLM) கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) காலியாக உள்ள சமுதாய வளப் பயிற்றுநர் (Community Resource Trainer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு சுய உதவிக்குழுவில் (SHG) உறுப்பினர்களாக உள்ள பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தது இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறக் இருந்தால் மட்டும் போதுமானது.
தகுதி விவரம்:
* குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்து இருக்க வேண்டும்.
* மாவட்டம், வட்டாரம் மற்றும் ஊராட்சி அளவிலான குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்ட அனுபவம் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரரின் சுய உதவிக்குழுவில் வாராக்கடன் நிலை இல்லாமல் இருக்க வேண்டும்.
* சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அவசியம்.
* அரசியலில் முக்கிய பொறுப்பு வகிப்பவராகவோ, தனியார் நிறுவனங்களில் முழுநேரம் அல்லது பகுதிய நேரம் பணிபுரிபவராகவோ இருக்கக் கூடாது.
* விண்ணப்பிக்கும் நபர் சேர்ந்திருக்கும் குழுவிலிருந்து பரிந்துரையுடன் குழுத் தீர்மானம் இணைக்கப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
கவனிக்க வேண்டியவை:
- இது ஒப்பந்த அடிப்படையிலான வேலை என்பதால் பணி நிரந்தரம் குறித்த உரிமை கோர முடியாது.
- மாதாந்திர சம்பளம் வழங்கப்படாது.
- பயிற்சி நடைபெறும் காலங்களில் மட்டுமே மதிப்பூதியம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பங்கள் www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில், 10.09.2025 முதல் 17.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.