DRDO-வில் வேலைவாய்ப்பு!… மாதம் ரூ.31,000 சம்பளம்!… 2 நாட்கள்தான் உள்ளது!… மிஸ்பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!

DRDO-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellowship (JRF) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்த பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Tech. / B.E. அல்லது M.Tech. / M.E. with First Class தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 28 ஆண்டுகள் இருக்க வேண்டும். SC/ST க்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC க்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.31,000 சம்பளமாக வழங்கப்படவுள்ளது. https://www.drdo.gov.in/careers – ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கடைசி தேதி 26/04/2023-க்குள் hrd.itr@gov.in-க்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

KOKILA

Next Post

கடல் மட்டம் இரட்டிப்பு வேகத்தில் உயர்ந்துவருகிறது!... பூமிக்கு பேராபத்து!... ஐ.நா. காலநிலை எச்சரிக்கை!

Mon Apr 24 , 2023
கடந்த ஆண்டை காட்டிலும் உலகத்தில் கடல் மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாகியுள்ளது என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு தொடர்ந்து ஐந்தாவது அல்லது ஆறாவது வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது. சராசரியை விட சராசரியாக 1.15 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது. பசிபிக் பெருங்கடலின் பகுதியைக் குளிர்விக்கும் லா நினா நிகழ்வு மூன்றாம் ஆண்டாக ஏற்பட்டபோதும் இந்த வெப்பநிலை உயர்வு காணப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. உலக […]
989894 602987 sea levels mumbai shutterstock 082117

You May Like