மத்திய அரசின் கீழ் கெயில் இந்தியா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு பதவிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்:
தலைமை மேனேஜர் – 1
சீனியர் அதிகாரி – 5
சீனியர் இன்ஜினியர் – 8
அதிகாரி – 1
மாற்றுத்திறனாளிகள் பிரிவு – 14
வயது வரம்பு: சீனியர் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 46 வயது வரை இருக்கலாம். சீனியர் அதிகாரி பதவிக்கு 33 வயது வரை இருக்கலாம். சீனியர் பொறியாளர் பதவிக்கு 38 வயது வரை இருக்கலாம். மருத்துவ சேவைகள் பிரிவில் சீனியர் அதிகாரி பதவிக்கு 42 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: சட்டம், பி.காம், பிஇ, பி.டெக், எம்பிஏ ஆகியவற்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பிரிவுகளில் கீழ் பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தலைமை மேனேஜர் பதவிக்கு 12 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பளம்:
* தலைமை மேனேஜர் பதவிக்கு ரூ.90,000 முதல் ரூ. 2,40,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* சீனியர் பொறியாளர்/ அதிகாரி பதவிக்கு ரூ.60,000 – 1,80,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* இதர பதவிகளுக்கு ரூ.50,000 – 1,50,000 வரை சம்பளம்.
தேர்வு செய்யப்படும் முறை: F&S பிரிவு சீனியர் அதிகாரி பதவிக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். மருத்துவ சேவைகள் பிரிவு சீனியர் அதிகாரி பதவிக்கு எழுத்துத் தேர்வு அல்லது திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெற்றது. மொழி பிரிவில் அதிகாரி பதவிக்கு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெற்றது. பொதுவாக குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://gailonline.com/careers/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் 23 கடைசி தேதி ஆகும்.
Read more: கொஞ்ச மழைக்கே, இவ்வளவு தண்ணீர்.. வடிகால் வசதிகள் செய்யப்படாததே காரணம்.. தமிழக அரசை சாடிய விஜய் !



