வேலை தேடும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் (India Post Payments Bank) மொத்தம் 348 பணியிடங்களுக்கு தேசிய அளவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்:
கிராமின் டாக் சேவக் (GDS) நிர்வாகி – 348
தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்கள்: தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 17 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன:
- கடலூர்
- கரூர்
- திருச்சி
- திருவாரூர்
- உடையர்பாளையம்
- சென்னை
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- மானாமதுரை
- தல்லாகுளம்
- தேனி
- சார்ரிங் கிராஸ்
- சேலம்
- திருவண்ணாமலை
- கும்பகோணம்
- தஞ்சாவூர்
- சிதம்பரம்
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். நேரடியாக அல்லது தொலைத்தூரக் கல்வியில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் மாதத்தின் படி, இந்திய அஞ்சல் துறையில் GDS பதவியில் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
- பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுரிமை
- விண்ணப்பித்தவர்களின் கல்வி சான்றிதழ் மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும்.
- தகுதியுடையவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.
- வங்கிக்கு தேவையெனில், ஆன்லைன் தேர்வை நடத்தும் அதிகாரம் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் என்ற https://www.ippbonline.com/ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 29.10.2025.