பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி பெற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தேசிய அளவில் பல மாநிலங்களில் மொத்தம் 750 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கிறது.
பணியிட விவரம்: தேசிய அளவில் மொத்தம் 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 200 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவை எஸ்சி பிரிவில் – 58, எஸ்டி பிரிவில் – 3, ஒபிசி பிரிவில் – 86, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 10, பொதுப் பிரிவு – 43 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இடங்கள் வழங்கப்பட்டது.
வயது வரம்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு 01.08.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 20 வயதை நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். இதில் மத்திய அரசின் விதிமுறைகளின்படி, சமூக வாரியாக தளர்வு உண்டு.
கல்வித்தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
* தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதார்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் 01.04.2021 முதல் 01.08.2025 வரை தேதியின் பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பதார்களுக்கு உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உதாராணத்திற்கு, தமிழ்நாட்டில் பயிற்சி பெற தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: வங்கியில் தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மெட்ரோ நகரங்களுக்கு மாதம் ரூ.15,000, நகர பகுதிகளுக்கு மாதம் ரூ.12,000 மற்றும் புறநகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு:
- 100 மதிப்பெண்களுக்கு, 100 கேள்விகள்.
உள்ளூர் மொழித் தேர்வு:
- எழுத, படிக்க, பேச, புரிந்துகொள்ளும் திறன் அவசியம்.
- 10ஆம் / 12ஆம் வகுப்பில் அந்த மொழி பாடமாக இருந்தால் விலக்கு.
நேர்முகத் தேர்வு:
- சான்றிதழ் சரிபார்ப்பு
இறுதி தேர்வு:
- மூன்று கட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே சேர்க்கை.
விண்ணப்பிக்கும் முறை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழிற்பயிற்சி இடங்களுக்கு https://bfsissc.com/ என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது https://www.iob.in/Careers என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதார்கள் இதற்கு முன்பே https://nats.education.gov.in/ அல்லது https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025
Read more: எலும்புகளை வலுப்படுத்த என்ன சாப்பிட வேண்டும்?. இந்த 3 உணவுகள் போதும்!.