தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கால்நடை மருத்துவர்களை பணியமர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகாப்பூர்வ அறிவிப்பின் படி, மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவிருக்கின்றன.
காலிப்பணியிடங்கள்:
விலக்கு நல அலுவலர் – 38
கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் – 38
வயது வரம்பு: விலக்கு நல அலுவலர் பதவிக்கு 35 முதல் 55 வயது வரை இருக்கலாம். கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு 40 வயதிற்கு குறைவானவராக இருக்க வேண்டும்.
விலங்கு நல அலுவலர் பதவிக்கு தகுதிகள்:
* கால்நடை அறிவியலில் இளங்கலை பட்டம் (B.V.Sc & AH) அல்லது
* முதுகலை பட்டம் (M.V.Sc) பெற்றிருக்க வேண்டும்.
* குறைந்தது 10 ஆண்டுகள் பணியனுபவம் இருக்க வேண்டும்.
* விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் விலங்கு நலப் பணிகளில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் அவசியம்.
* தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவராக இருக்க வேண்டும்.
* அரசு நலத்திட்டங்கள், விலங்கு நல சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
* கணினி பயன்பாடு மற்றும் அறிக்கை தயாரிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் நன்றாகத் தெரிய வேண்டும்.
2. கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கான தகுதிகள்:
* கால்நடை அறிவியலில் B.V.Sc. & AH பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* மேலும் தமிழ்நாடு கால்நடை கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டவர் ஆக இருக்க வேண்டும்.
* விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாட்டு சிகிச்சையில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் அவசியம்.
* அறுவை சிகிச்சை, மகப்பேறியல் (Gynecology) மற்றும் மகளிர் மருத்துவம் தொடர்பான துறைகளில் M.V.Sc. பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை பெறுவர்.
* தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் நன்றாகப் படித்து, எழுதிப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.56,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? இந்தப் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://tnawb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14 நவம்பர் 2025.
முகவரி: தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்
எண்.13/1, 3வது கடல் நோக்கு சாலை,
வால்மீகி நகர், திருவான்மியூர்,
சென்னை – 600 041.



