தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விவரம்:
மொத்த காலியிடங்கள்: 1,794
பணியின் பெயர்: கள உதவியாளர் (Field Assistant)
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் (TANGEDCO)
கல்வித் தகுதி: தேசிய தொழிற் கல்வி மற்றும் பயிற்சிக்கான குழுமம் (National Council for Training in Vocational Trade) வழங்கிய பின்வரும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்: தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) அல்லது தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate).
வயது வரம்பு: தேர்வர்கள் 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிபட்ச வயது வரம்பு 32 ஆகும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 34 வரையும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 37 வரையும் சலுகை கொடுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: நிலை 2ன் கீழ் ரூ.18,800 முதல் ரூ. 59,900 வரை சம்பளம் வழங்கப்படும்..
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு தாள்களைக் கொண்டது. தாள்-Iல் தமிழ் மொழி, பொது அறிவு, திறறைவு தொடர்பாக 100 கேள்விகள் இடம்பெறும். தாள் – IIல் தொழிற்பயிற்சி பாடத் தாளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? தேர்வர்கள் www.tnpscexams.in
என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய, தளத்தில் உள்ள தமிழ் / ஆங்கில இணைப்பைக் கிளிக் செய்யலாம்.
Read more: 1 நிமிடத்தில் ரூ.1 லட்சம்..! 8 கோடி PF பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விவரம் இதோ..!