இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்:
- கூர்க்கா – ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
- இரவு காவலர் – ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
- மிருதங்கம் – ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- புஜங்கம் – ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- வேத பாராயணம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
- குடைக்காரர் – ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
- மாலைக்கட்டி – ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
- தமிழ்ப்புலவர் – ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- சமய பிரசங்கி – ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- சித்த மருத்துவர் – ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை
- ஓட்டுநர் – சம்பள விவரம் பின்னர் அறிவிக்கப்படும்
- செவிலியர் – ரூ.14,000 (நிலையான மாதச் சம்பளம்)
- கணினி இயக்குபவர் – ரூ.15,000 (நிலையான மாதச் சம்பளம்)
அருள்மிகு கோட்டா ஆறுமுக சுவாமி திருக்கோயில்:
- நாதஸ்வரம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
- தூய்மை பணியாளர் – ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
- தட்டச்சர் – ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை
- பலவேலை – ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
அருள்மிகு சந்தானவேணுகோபாலபுரம் சுவாமி திருக்கோயில்:
- பலவேலை – ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- அருள்மிகு நாதாதீஸ்வர சுவாமி திருக்கோயில்:
- நாதஸ்வரம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
- காவலர் – ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
அருள்மிகு வடாரண்பேஸ்வர சுவாமி திருக்கோயில்:
- தட்டச்சர் – ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை
- மேளம் – ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்:
நாதஸ்வரம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
வயது வரம்பு: 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதார்கள் 45 வய்து மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
* பெரும்பாலான பதவிகளுக்கு தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருந்தால் போதுமானது ஆகும்.சில பதவிகளுக்கு அந்தந்த பதவிக்கு ஏற்ப கல்வித்தகுதி அவசியமாகும்.
* இரவு காவலர், குடைக்காரர், ஓட்டுநர், தூய்மை பணியாளர், பல வேலை, காவலர் ஆகிய பதவிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி தேவை.
* மிருதங்கம், புஜங்கம், வேத பாராயணம், நாதஸ்வரம், மேளம் ஆகிய கலைஞர் பணியிடங்களுக்கு சமய நிறுவனம்/ அரசு நிறுவனம்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் இசைப் பள்ளியில் அந்தந்த கருவிக்கான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தமிழ்ப் புலவர் பதவிக்கு தமிழில் B.Lit அல்லது M.A/M.Lit ஆகியவை முடித்திருக்க வேண்டும்.
* சமய பிரசங்கி பதவிக்கு ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் 2 ஆண்டு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
* சித்த மருத்துவர் பதவிக்கு சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பும் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
* ஓட்டுநர் பதவிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் அவசியமாகும். 1 வருடம் அனுபவம் தேவை.
* செவிலியர் பதவிக்கு நர்சிங் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* கணினி இயக்குபவர் பதவிக்கு கணினி அறிவியலில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பணியிடங்கள் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை ரூ.100 கட்டணம் செலுத்தி கோவில் அலுவலகத்தில் இருந்து பெற்றக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, தபால் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு பணிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
திருத்தணிகை – 631 209.
திருவள்ளூர் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.11.2025.