விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் (District Hub for Empowerment of Women – DHEW) தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மிஷன் சக்தி திட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த மையத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு IT Assistant பணியிடத்தை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
* கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / கணினி பயன்பாடு போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம்.
* குறைந்தது 3 ஆண்டுகள் தரவு மேலாண்மை, இணைய அடிப்படையிலான அறிக்கைகள், ஆவணங்கள் தயாரித்தல் தொடர்பான அனுபவம் இருக்க வேண்டும்.
* அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கூடுதல் பலனாகும்.
* மேற்கண்ட துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம்: தொகுப்பூதியம் மாதம் ரூ.20,000/-(ரூபாய் இருபதாயிரம்) வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை அறை எண் 26, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது மாவட்ட இணையதளத்தில்: https://viluppuram.nic.in இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 22.09.2025 மாலை 5.45 மணிக்குள் அறை எண் 26, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.