முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Project Engineer பணிக்காக இப்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியின் முக்கிய அம்சங்கள்:
- பதவி: Project Engineer (Elite Division)
- சம்பளம்: ஆண்டு ரூ.3.50 லட்சம் (மாதம் சுமார் ரூ.29,166)
- சேவை ஒப்பந்தம்: 12 மாத Service Agreement (விலகினால் ரூ.75,000 செலுத்த வேண்டும்)
- இடம்: PAN India (இந்தியாவின் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்)
தகுதி விவரங்கள்:
படிப்பு: B.E / B.Tech / M.E / M.Tech (2025-ம் ஆண்டு முடித்திருக்க வேண்டும்)
பிரிவு: Computer Science, Information Technology மற்றும் Circuital Branches
மதிப்பெண்:
இன்ஜினியரிங்: குறைந்தபட்சம் 60% அல்லது CGPA 6.0
10 & 12 ஆம் வகுப்பு: குறைந்தபட்சம் 60%
அரியர்: இருக்கக்கூடாது
இடைவெளி: 10 & 12 இடையே அதிகபட்சம் 3 வருட இடைவெளி அனுமதி. கல்லூரியில் இடைவெளி அனுமதி இல்லை.
தேர்வு நடைமுறை: மொத்தம் 3 ரவுண்ட்கள் நடைபெறும்.
1. Online Assessment
- Aptitude Test
- Written Communication Test
- Online Programming Test (Java, C, C++ அல்லது Python யில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்)
2. Business Discussion
3. HR Discussion
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31, 2025 – இரவு 11.59 மணி வரை. கடந்த 3 மாதங்களில் Wipro இல் interview attended செய்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.
Read more: பீகார் SIR… எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை…! தேர்தல் ஆணையம் தகவல்…!