தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. தமிழகத்தை மையமாகக் கொண்டு சென்னை, மதுரை, தென்காசி, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிய மென்பொறியாளர்கள் பலரும் விரும்புவர்.
இந்த நிறுவனத்தில் Technical Support Engineers பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி ஆட்சேர்ப்புக்கு, தேர்வர்கள் அடிப்படை தொலைத்தொடர்பு திறன் போன்ற குறைந்தபட்ச கல்வித் தகுதி அளவுகோல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் வரை தேர்வு செயல்முறை இருக்கும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஊதியம் எவ்வளவு? மாதம் ரூ.35 ஆயிரம் (Technical Support Engineers )
வேலை விவரம்:
* வெளிநாட்டு, உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் குரல் அடிப்படையில் பணிபுரிய வேண்டும்.
* தெளிவான மற்றும் நம்பிக்கையான தகவல்தொடர்பு மூலம் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை உருவாக்குதல்.
* வாடிக்கையாளர் திருப்தி மற்றும் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துத வேண்டும்.
* தொழில்நுட்ப சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க தொழில்நுட்பக் குழுவுடன் ஈடுபடுதல்.
* தொழில்நுட்ப உள்ளடக்கக் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றுதல்.
* இரவுப் பணிகளில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.zohocorp.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Read more: கார் ரேஸில் மீண்டும் மிரட்டிய அஜித்..!! ஸ்பெயின் பந்தயத்தில் ஏ.கே. ரேசிங் அணி சாதனை..!!