மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மினி ரத்னா நிறுவனம் – Projects and Development India Limited (PDIL), பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி, மொத்தம் 87 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது பொறியியல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்ளமோ பொறியாளர்கள்: மொத்தம் 15 இடங்கள்
- சிவில் – 2
- கணினி – 2
- இஸ்ரூமெண்டேஷன் – 1
- மெக்கானிக்கல் – 8
- டிசைன் – 2
டிகிரி பொறியாளர்கள் – மொத்தம் 72 இடங்கள்
- சிவில் – 19
- எலெக்ட்ரிக்கல் – 7
- தீ/ பாதுகாப்பு – 5
- Inspection (சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல்) – 4
- இன்ஸ்ரூமெண்டேஷன் – 5
- மேனேஜ்மெண்ட் சேவை – 1
- மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் – 3
- மெக்கானிக்கல் – 18
- பிராசஸ் – 7
- திட்ட மேலாண்மை – 3
வயது வரம்பு:
டிப்ளமோ தகுதிப்பட்டவர்கள்:
- கிரேடு 1 – அதிகபட்சம் 37 வயது
- கிரேடு 2 – அதிகபட்சம் 35 வயது
- கிரேடு 3 – அதிகபட்சம் 32 வயது
டிகிரி தகுதிப்பட்ட பொறியாளர்கள்:
- அதிகபட்சம் 40 வயது
- கிரேடு 3 பிரிவில் – அதிகபட்சம் 37 வயது
கல்வித்தகுதி:
* விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடப்பிரிவு அல்லது அதனுடன் தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டப்படிப்பு (B.E / B.Tech) முடித்திருக்க வேண்டும்.
* டிப்ளமோ பொறியாளர் குறைந்தபட்சம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* டிகிரி பொறியாளர் குறைந்தபட்சம் 2 முதல் 8 ஆண்டுகள் வரை பணிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகள் வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் நபர்கள் நாட்டின் எந்த மாநிலத்திலும் பணி அமர்த்தப்படுவார்கள்.
* தொய்டா, கொல்கத்தா, சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் பணி வாய்ப்பைப் பெறுபவர்களுக்கு மாதம் ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
* டிப்ளமோ தகுதி பெற்று 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.26,600 வழங்கபடும். 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுகு ரூ.32,100 வழங்கப்படும்.
* டிகிரி தகுதியுடன் 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.42,500 வழங்கப்படும். 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.51,800 மற்றும் 8 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.59,700 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் https://pdilcareer.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: 183 மில்லியன் இமெயில் பாஸ்வேர்டுகள் கசிவு: உங்கள் Gmail பாதுகாப்பாக உள்ளதா? தரவை எப்படி காப்பது?



