பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் (Specialist Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிட விவரம்:
தேசிய அளவில் 13 மாநிலங்களில் உள்ள 750 காலிப்பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 85 பணியிடங்கள் மற்றும் புதுச்சேரியில் 5 பணியிடங்கள் உள்ளன.
தமிழ்நாட்டுக்கான 85 இடங்கள் பிரிவுவாரியாக:
- பொதுப் பிரிவு – 37
- எஸ்சி – 12
- எஸ்டி – 6
- ஒபிசி – 22
- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 8
வயது வரம்பு: மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, இப்பணியிடங்களுக்கு 01.08.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதேபோல், அதிகபட்சம் 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பில் அதிகபடியான வயதில் தளர்வு வழங்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
* உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (Graduation) முடித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும், விண்ணப்பதாரர்கள் பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks) அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (Regional Rural Banks) குறைந்தது 18 மாதங்கள் பணி செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்: பஞ்சாப் மற்றும் சிந்து உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் JMGS I கீழ் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். இப்பதவிக்கான அடிப்படை சம்பளம் ரூ.48,480 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
1-வது கட்டம் – எழுத்துத் தேர்வு:
- மொத்தம் 120 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும்.
- தமிழ் மொழியில் 10 அல்லது 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு பெறுவர்.
2-வது கட்டம் – சான்றிதழ் சரிபார்ப்பு:
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
3-வது கட்டம் – நேர்காணல்:
- தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
4-வது கட்டம் – தமிழ் மொழி தகுதித் தேர்வு:
- 10/12ஆம் வகுப்பில் தமிழ் படிக்காதவர்கள் கட்டாயம் இந்தத் தேர்வை எழுத வேண்டும்.
6-வது கட்டம் – பணி நியமனம்:
- மொழித் தேர்விலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் https://punjabandsindbank.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.