பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடம்: அறிவிப்பின்படி IT Officer (203), Agricultural Officer (310), Rajbhasha Officer (78), Law Officer (56), HR/Personnel Officer (10), Marketing Officer (350) எனப் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1,007 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. இவை பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் சிந்து பேங்க் போன்ற வங்கிகளில் நிரப்பப்படும்.
கல்வித்தகுதி: ஐடி என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேளாண் அலுவலர்களுக்கான தகுதி வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 20-30 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கிட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.
சம்பளம்: ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட (Prelims), மெயின்ஸ் மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களில் தேர்வு நடைபெறும். தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது. மெயின்ஸ் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவு மற்றும் ஓபிசிக்கு ரூ.850; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175.என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதாரர்கள் ibps.in என்ற இணைய தளத்தில் சென்று தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21 ஜூலை 2025 ஆகும்.
Read more: பெண்களுக்கு மாரடைப்பு வருவதை முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்.. இதை எப்படி கண்டறிவது..?