பரோடா வங்கியின் கீழ் செயல்படும் கேப்பிட்டல் மார்க்கெட் நிறுவனத்தில், வணிக மேம்பாட்டு மேனேஜர் (Business Development Manager) பதவிக்கான 70 காலிப்பணியிடங்கள் தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதிகள் என்னென்ன?
* இப்பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* நிதி சார்ந்த சேவைகளில் குறைந்தது 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் திறன், வாடிக்கையாளர் உறவு மேலாண்மை திறன் மற்றும் பேசும் திறன் கொண்டிருப்பது சிறப்பாகும்.
பணிப் பொறுப்புகள்:
- வாடிக்கையாளர்களுக்கான Demat மற்றும் Trading கணக்குகளை துவங்குதல்
- அவற்றை ஊக்குவித்து வணிகத்தை விரிவுபடுத்துதல்
- புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தல்
- வங்கியும் வாடிக்கையாளர்களும் இடையே நெருக்கமான உறவை பராமரித்தல்
சம்பளம்: சம்பளம் குறித்த விவரம் இடம்பெறவில்லை. இருப்பினும், தேர்வு செய்யப்படும் நபர்களின் அனுபவம் மற்றும் திறனுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களில் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ‘careers@bobcaps.in’ என்ற இமெயில் முகவரியில் தங்களில் சுயவிவரங்கள் அடங்கிய படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். இப்பணிக்கு கடைசி தேதி குறிப்பிடவில்லை. பணியிடங்கள் நிரப்பப்படும் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என கருதப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்வையிடவும்.
Read more: EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியிருக்கீங்களா..? தவணை செலுத்த தவறினால் உங்கள் ஃபோன் வேலை செய்யாது..!!