BHEL நிறுவனத்தில் வேலை.. ரூ.65,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது..?

BEL Job 2025 1

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் பெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் செயல்படும் 11 ஆலைகளில் பணிபுரிய மொத்தம் 515 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.


பணியிட விவரம்:

  • பவுண்டரிமேன் 4
  • எலெக்ட்ரிக்கல் மெக்கானிக் 18
  • எலெக்ட்ரிஷியன் 65
  • மெக்கானிஸ்ட் 104
  • டர்னர் 51
  • வெல்டர் 97
  • பிட்டர் 176

இந்தியாவின் முன்னணி உற்பத்தி நிறுவனமாக விளங்கும் BHEL, தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மற்றும் திருச்சி ஆலைகளிலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நியமனம் அளிக்க உள்ளது.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு ஜூலை 1-ம் தேதியின்படி அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயது வரை இருக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி:

* விண்ணப்பிக்க விரும்புவோர் தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC – ITI) மற்றும் தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.

* இரண்டிலும் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கலாம்.

சம்பள விவரம்: பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் முதல் 1 வருடம் மட்டும் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள். பயிற்சி காலத்திற்கு பின்னர் ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த வேலைவாய்ப்புக்கான தேர்வு மூன்று கட்டங்களில் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு (Computer Based Test) – அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத அனுமதிக்கப்படுவர்.

திறன் தேர்வு (Skill Test) – எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே நடத்தப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) – இறுதிக் கட்டமாக நடைபெறும். இரண்டு தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஐடிஐ தகுதியும் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிகக் விரும்பும் நபர்கள் https://careers.bhel.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,077 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.472 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 12-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read more: இந்த உணவுகளை சாப்பிட்டால் நிச்சயம் சிறுநீரக கற்கள் வரும்..!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

English Summary

Job in BHEL.. Salary Rs.65,000.. How to apply..?

Next Post

அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார் புஜாரா..!! ரசிகர்கள் ஷாக்..!!

Sun Aug 24 , 2025
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பிக்கைக்குரிய நாயகராக இருந்த சேதேஷ்வர் புஜாரா, இன்று (ஆகஸ்ட் 25) அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த புஜாரா, கடந்த சில காலமாக அணியில் இடம் பெறவில்லை. பிசிசிஐ புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை முன்னிலைப்படுத்தி, புஜாராவை அணிக்கு தேர்வு செய்யவில்லை. 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் […]
Pujara 2025

You May Like