பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாகவுள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : பஞ்சாப் & சிந்து வங்கி
வகை : மத்திய அரசு வேலை
பதவியின் பெயர் : உள்ளூர் வங்கி அதிகாரி
பணியிடம் : இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள் : 750
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும்
மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை :
ஆந்திரா – 80, சத்தீஸ்கர் – 40, குஜராத் – 100, இமாச்சல் – 30, ஜார்கண்ட் – 35, கர்நாடகா – 65, மகாராஷ்டிரா – 100, புதுச்சேரி – 05, பஞ்சாப் – 60, தமிழ்நாடு – 85 என மொத்தம் 750 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. வயது வரம்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடம்.
விண்ணப்ப கட்டணம் :
எஸ்சி/எஸ்சி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும் என்றும் மற்ற பிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட தேர்வு, நேர்காணல், இறுதி தகுதிப் பட்டியல், உள்ளூர் மொழியில் தேர்ச்சி, இறுதித் தேர்வு
விண்ணப்பிப்பது எப்படி..?
https://punjabandsindbank.co.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.09.2025
Read More : “கூடவே பழகிட்டு துரோகம் பண்ணிட்டியே”..!! நண்பன் மனைவியுடன் உல்லாசம்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்..!!