சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிட விவரம்:
செவிலியர் (Staff Nurse) – 288
சமூக சேவகர் (Psychiatric Social Worker) – 5
உளவியலாளர் (Clinical Psychologist) – 1
தடுப்பூசி குளிர் சங்கிலி மேலாளர் (Vaccine Cold Chain Manager) – 1
மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் – 7
நிர்வாக உதவியாளர் – 1
மருத்துவமனை ஊழியர் – 2
பாதுகாப்பு பணியாளர் – 1
வயது வரம்பு: செவிலியர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரையும், நிர்வாக உதவியாளர் பதவிக்கு 45 வயது வரையும் இருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு வயது வரம்பு விவரம் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
கல்வித்தகுதி:
* செவிலியர் – DGNM/ B.Sc Nursing, தமிழ்நாடு அல்லது இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு அவசியம்.
* சமூக சேவகர் – சமூக சேவை / மனநல சமூகத்தில் முதுகலை பட்டம்.
* உளவியலாளர் – மருத்துவ உளவியல் தொடர்பான முதுகலை பட்டம்.
* தடுப்பூசி குளிர் சங்கிலி மேலாளர் – கணினி அறிவியல்/ IT பொறியியல் டிகிரி + 1 ஆண்டு அனுபவம்.
* மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் – சுகாதார ஆய்வாளர் சான்றிதழ்/ அறிவியல் பட்டம் + MS Office + 2 சக்கர வாகன உரிமம்.
* நிர்வாக உதவியாளர் – பட்டப்படிப்பு + MS Office + 1 ஆண்டு அனுபவம்.
* மருத்துவமனை ஊழியர்/ பாதுகாப்பு பணியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி (அல்லது தோல்வி).
சம்பள விவரம்:
- செவிலியர் பதவிக்கு ரூ.18,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
- சமூக சேவகர் பதவிக்கு மாதம் ரூ.23,800 வழங்கப்படும்.
- உளவியலாளர் மற்றும் தடுப்பூசி குளிர் சங்கிலி மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.
- மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பதவிக்கு மாதம் ரூ.19,800 வழங்கப்படும்.
- நிர்வாக உதவியாளர் பதவிக்கு ரூ,12,000 மாதம் வழங்கப்படும்.
- மருத்துவமனை ஊழியர் மற்றும் பாதுகாப்பு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.8,500 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்கள் 11 மாத காலக்கட்டத்திற்கு தற்காலிகமாக நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு பணி வழங்கப்படும். ஆகவே, விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: https://chennaicorporation.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் புகைப்படம், பிறப்புச் சான்று, கல்வித் தகுதி, பதிவு சான்று, முகவரி, அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பலாம்.
முகவரி: உறுப்பினர் செயலாளர் அலுவலகம், CCUHM / நகர சுகாதார அதிகாரி, பொது சுகாதாரத் துறை, 3வது தளம், அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டடம், சென்னை – 3.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2025.
Read more: 600-ஐ கடந்த பலி எண்ணிக்கை.. 1,300 பேர் படுகாயம்.. ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம்..!!