இந்தியாவின் முதன்மையான இயற்கை எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனம் எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் உள்ள 29 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
தலைமை மேனேஜர் – 1
சீனியர் அதிகாரி – 5
சீனியர் இன்ஜினியர் – 8
அதிகாரி – 1
மாற்றுத்திறனாளிகள் பிரிவு – 14
கல்வித்தகுதி:
- அந்தந்த பிரிவுகளில் கீழ் பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தலைமை மேனேஜர் பதவிக்கு 12 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- சட்டம், பி.காம், பிஇ, பி.டெக், எம்பிஏ ஆகியவற்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- சீனியர் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 46 வயது வரை இருக்கலாம்.
- சீனியர் அதிகாரி பதவிக்கு 33 வயது வரை இருக்கலாம்.
- சீனியர் பொறியாளர் பதவிக்கு 38 வயது வரை இருக்கலாம்.
- மருத்துவ சேவைகள் பிரிவில் சீனியர் அதிகாரி பதவிக்கு 42 வயது வரை இருக்கலாம்.
சம்பளம்:
தலைமை மேனேஜர் பதவிக்கு ரூ.90,000 முதல் ரூ. 2,40,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனியர் பொறியாளர்/ அதிகாரி பதவிக்கு ரூ.60,000 – 1,80,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதர பதவிகளுக்கு ரூ.50,000 – 1,50,000 வரை சம்பளம்..
தேர்வு செய்யப்படும் முறை:
* F&S பிரிவு சீனியர் அதிகாரி பதவிக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.
* மருத்துவ சேவைகள் பிரிவு சீனியர் அதிகாரி பதவிக்கு எழுத்துத் தேர்வு அல்லது திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெற்றது.
* மொழி பிரிவில் அதிகாரி பதவிக்கு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெற்றது. பொதுவாக குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://gailonline.com/careers/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 23.12.2025.



