இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விவரம்;
உதவி பொறியாளர் – 1
இளநிலை உதவியாளர் – 2
சீட்டு விற்பனையாளர் – 3
தமிழ் புலவர் – 1
உதவி மின்பணியாளர் – 2
பாரா – 6
குருக்கள் அர்ச்சகர் உபகோயில் – 1
காவலர் – 1
உதவி பரிச்சாரகர் – 2
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதைப் பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதே போன்று, 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிவாரியான தகுதிகள் விவரம்:
உதவி பொறியாளர்: சிவில் பொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பிரிவு A மற்றும் B-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில் பொறியியல் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர்:
- 10-ம் வகுப்பு தேர்ச்சி
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி
சீட்டு விற்பனையாளர்:
- 10-ம் வகுப்பு தேர்ச்சி
- அரசு தட்டச்சு தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
தமிழ் புலவர்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Lit, அல்லது BA / MA (தமிழ்), அல்லது M.Lit, திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும்
உதவி மின்பணியாளர்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் மின் / மின் கம்பிப் பணியாளர் ITI சான்றிதழ், மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பாரா: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
குருக்கள் / அர்ச்சகர்: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமப் பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஒரு ஆண்டு படிப்பு மேற்கொண்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
காவலர்: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
உதவி பரிச்சாராகர்: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கோயில் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம், பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
- உதவி பொறியாளர் பதவிக்கு ரூ.36,700 – 1,16,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
- இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர் மற்றும் தமிழ் புலவர் பதவிகளுக்கு ரூ.18,500 முதல் 58,600 சம்பளம்
- உதவி மின்பணியாளர் பதவிக்கு ரூ.16,600 – 52,400
- பாரா பதவிக்கு ரூ.15,900 – 50,400
- குருக்கள் அர்ச்சகர் உபகோயில் மற்றும் காவலர் பதவிகளுக்கு ரூ.11,600 – 36,800 சம்பளம்
- உதவி பரிச்சாரகர் பதவிக்கு ரூ.10,000 – 31,500 சம்பளம்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய தகுதிச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
Read more: மதியம் கொஞ்ச நேரம் தூங்கினால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..? – ஆய்வில் வெளியான தகவல்



