ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம் (RRB) ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய அளவில் செக்ஷன் கண்ட்ரோலர் (Section Controller) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்: ரயில்வேயில் செக்ஷன் கண்ரோளர் (RRB Section Controller) பதவிக்கு உத்தேசமாக 368 காலிப்பணியிடங்கலுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சம்பளம்: இப்பதவிக்கு 7வது ஊதிய குழுவின்படி, நிலை 6 கீழ் அடிப்படை சம்பளம் ரூ.35,400 ஆகும். மேலும், கொடுப்பனை மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் இணைந்து மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: ரயில்வே செக்ஷன் கண்ரோளர் பதவிக்கு 01.01.2026 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 20 முதல அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்ரின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணபிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2025.
Read more: பிரிந்து சென்ற முதல் மனைவி.. இரண்டாவது திருமணத்தில் இளைஞனுக்கு இப்படியா நடக்கனும்? 2 உயிர் போச்சே..!