தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை.. லட்சத்தில் சம்பளம்..!! செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

job 2

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களுக்காக புதிய பணியிடங்களை அறிவித்துள்ளது.


பணியிட விவரம்:

டெபியூட்டி மேனேஜர் (தொழில்நுட்ப பிரிவு) – 34

வயது வரம்பு: டெபியூட்டி மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகபடியாக 34 வயது வரை இருக்கலாம். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி 5 வருடங்கள், ஒபிசி 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 வருடங்கள், முன்னாள் ராணுவத்தினர் 5 வருடங்கள் என தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், கேட் தேர்வில் சிவில் பொறியியல் பிரிவில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.
  • 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • திட்டமிடுதல், வடிவமைத்தில், அதனை செயல்படுத்துதல், மேற்பார்வை ஆகியவை பணியின் தன்மை ஆகும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட் மதிப்பெண்களை பதிவிட வேண்டும். கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நேர்காணல் ஆகியவை கிடையாது. தேர்வு செய்யப்படும் நபர்கள் வெவ்வெறு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nhidcl.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.11.2025.

Read more: சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்துறீங்களா..? இதுதான் லிமிட்.. இதை தாண்டினால் உயிருக்கே ஆபத்தாகிடும்..!! திடுக்கிடும் தகவல்..

English Summary

Job in National Highways Development Corporation.. Salary in lakhs..!

Next Post

மாதம் 20,000 வருமானம் கிடைக்கும் சிறந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி..?

Sun Oct 5 , 2025
The best post office scheme that gives an income of 20,000 per month.. How to invest..?
tamil news 2024 11 24t100908.900 1280x720xt 1

You May Like