ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை.. ரூ.2,20,000 வரை சம்பளம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

oil india job2

மத்திய அரசின் எரிப்பொருள் உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் விவரங்கள்

மேற்பார்வை பொறியாளர் 3
தலைமை அதிகாரி 97
செயலாளர் 1
இந்தி அதிகாரி 1

வயது வரம்பு:

  • மேற்பார்வை பொறியாளர் (General): 32/34 வயது
  • மேற்பார்வை பொறியாளர் (SC): 37/39 வயது
  • இதர பதவிகள்: அதிகபட்சம் 27 வயது; சில பதவிகளில் 29 வயது வரை
  • SC, ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகள் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

மேற்பார்வை பொறியாளர்: 65% மதிப்பெண் பெற்ற பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது 4 வருட அனுபவம், அல்லது பெட்ரோலியம்/தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது 4 வருட அனுபவம்.

தலைமை அதிகாரி: வேதியியல் அறிவியல், கெமிக்கல் பொறியியல், சிவில் பொறியியல், எலெக்ட்ரிக்கல் பொறியியல், பெட்ரோலியம் பொறியியல், கணக்கியல் (ICAI/ICMAI), கணினி அறிவியல்/ஐடி, மெக்கானிக்கல், தீ மற்றும் பாதுகாப்பு, சமூக சேவை, சுற்றுச்சூழல் அறிவியல், புவி இயற்பியல், புவியியல், சட்டம், எம்பிஏ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

செயலாளர்: பட்டப்படிப்பு + செயலகப் பயிற்சி / நவீன அலுவலக மேலாண்மை / நிர்வாக உதவியாளர் 2 ஆண்டு டிப்ளமோ. கூடுதலாக குறைந்தது 2 வருட அனுபவம் தேவை.

இந்தி அதிகாரி: இந்தியில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

* மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு ரூ.80,000 முதல் அதிகபடியாக ரூ.2,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

* தலைமை அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

* செயலாளர் பதவிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சமபளம் வழங்கப்படும்.

* இந்தி அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆயில் இந்தியா நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களில் மேற்பார்வை பொறியாளர் மற்றும் தலைமை அதிகாரி பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். இதர பதவிகளுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும். பாதுகாப்பு பிரிவில் உள்ள தலைமை அதிகாரி பதவிக்கு மட்டும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசு நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப இணையதளம்: https://www.oil-india.com/advertisement-list

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (SC, ST, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் இல்லாது)

விண்ணப்பத் தொடக்கம்: ஆகஸ்ட் 26, 2025

விண்ணப்ப கடைசி தேதி: செப்டம்பர் 26, 2025

கணினி வழி தேர்வு தேதி: நவம்பர் 1, 2025

விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும். பாடத்திட்டம், பதவிகள் விவரம் மற்றும் இதர தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

Read more: புதிய காதலனுக்காக 10 வருட காதலை தூக்கி எறிந்த இளம்பெண்..!! எஸ்.ஐ. மீது மோகம் கொண்ட காதலி..!! காதலனின் விபரீத முடிவு..!!

English Summary

Job in Oil India.. Salary up to Rs. 2,20,000.. Great opportunity.. Don’t miss it..!!

Next Post

டெபிட் கார்டு இல்லாமலே UPI PIN-ஐ அமைக்கலாம்..! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க..!

Mon Sep 1 , 2025
PhonePe, GPay, Paytm போன்ற கட்டண செயலிகள் மூலம் பணம் செலுத்த UPI பின் தேவை. இது இல்லாமல், UPI கட்டணம் மூலம் நீங்கள் யாருக்கும் பணம் செலுத்தவோ அல்லது பணத்தை பெறவோ முடியாது. UPI பின் 4 அல்லது 6 இலக்கங்களைக் கொண்டது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதற்கு முன்பு வரை, உங்கள் UPI பின்னை உருவாக்க அல்லது மாற்ற டெபிட் கார்டு தேவைப்பட்டது.. ஆனால் இப்போது […]
Google Pay PhonePe Paytm 1

You May Like