மாவட்ட சுகாதார துறையில் வேலை.. ரூ. 40,000 வரை சம்பளம்.. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

job2

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ், தேனி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் மாவட்ட மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 19 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் மருத்துவமனை நிர்வாகம், தொழில்நுட்பம், இயற்கை மருத்துவம் மற்றும் துணை சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ளது.


பணியிட விவரம்:

மாவட்ட தர ஆலோசகர் – 1

ப்ரோகிராம்பர் உடன் நிர்வாக உதவியாளர் – 1

கணக்கு உதவியாளர் – 1

ஆடியோமெட்ரிஷியன் – 1

ரேடியோகிராப்பர் – 1

ஒடி டெக்னீஷியன் – 1

இடைநிலை சுகாதாரப் பணியாளர் – 2

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 4

சீனியர் சிகிச்சை மேற்பார்வையாளர் – 3

லேப் டெக்னீஷியன் – 1

சிறப்பு கல்வியாளர் – 1

ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – 1

சமூகப் பணியாளர் – 1

வயது வரம்பு:

  • விண்ணப்பிக்கும் நபர்களில் அதிகபடியான வயது வரம்பு என்பது 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மாவட்ட தர ஆலோசகர் மற்றும் ப்ரோகிராம்பர் உடன் நிர்வாக உதவியாளர் பதவிகளுக்கு அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம்.
  • கணக்கு உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம்.
  • இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:

மாவட்ட தர ஆலோசகர்: பட்டப்படிப்பு + மருத்துவ நிர்வாகத்தில் முதுகலை + 2 ஆண்டு அனுபவம்

நிர்வாக உதவியாளர்: ஏதேனும் டிகிரி + கணினி அறிவு + 1 ஆண்டு அனுபவம்

கணக்கு உதவியாளர்: B.Com + Tally

ஆடியோமெட்ரிஷியன்: 12-ம் வகுப்பு + சான்றிதழ்

ரேடியோகிராப்பர்: 2 ஆண்டு டிப்ளமோ / டிகிரி

ஒடி டெக்னீஷியன்: சம்பந்தப்பட்ட சான்றிதழ்

இடைநிலை சுகாதாரப் பணியாளர்: நர்சிங் டிப்ளமோ / டிகிரி

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்: 8-ம் வகுப்பு தேர்ச்சி

சீனியர் சிகிச்சை மேற்பார்வையாளர்: டிகிரி + 2 ஆண்டு சான்றிதழ்

லேப் டெக்னீஷியன்: 12-ம் வகுப்பு + டிப்ளமோ

சிறப்பு கல்வியாளர்: டிகிரி + B.Ed

ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்: UG / PG

சமூகப் பணியாளர்: PG

பதவிவாரியான சம்பள விவரம்:

மாவட்ட தர ஆலோசகர் – மாதம் ₹40,000

ப்ரோகிராம்பர் உடன் நிர்வாக உதவியாளர் – ₹18,000

கணக்கு உதவியாளர் – ₹16,000

ஆடியோமெட்ரிஷியன் – ₹17,250

ரேடியோகிராப்பர் – ₹13,300

ஒடி டெக்னீஷியன் – ₹11,200

இடைநிலை சுகாதாரப் பணியாளர் – ₹18,000

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – ₹8,500

சீனியர் சிகிச்சை மேற்பார்வையாளர் – ₹19,800

லேப் டெக்னீஷியன் – ₹13,000

சிறப்பு கல்வியாளர் – ₹17,000

ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – ₹23,000

சமூகப் பணியாளர் – ₹23,800

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://theni.nic.in/notice_category/recruitment/ என்ற மாவட்ட இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்
  • இருப்பிடச் சான்றிதழ்
  • சிறப்பு தகுதிச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்
  • வகுப்பு சான்றிதழ்
  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஆதார் அட்டை

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

பல்துறை அலுவலக வளாகம் பிளாக் எண் : 1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

பின்பறம், தேனி – 625 531.

விண்ணப்பப்பிக்க கடைசி நாள் 10.12.2025 மாலை 5.45 மணி வரை

Read more: 2 ஆண்டுகளாக கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த பேராசிரியர்..!! தொல்லை தாங்க முடியாமல் மாணவி செய்த தரமான சம்பவம்..!!

English Summary

Job in the District Health Department.. Rs. Salary up to 40,000.. Eligible candidates can apply..!!

Next Post

தொடர் உயர்வுக்கு பின் இன்று சரிந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி..!

Tue Dec 2 , 2025
In Chennai today, the price of gold per sovereign fell by Rs. 240 to Rs. 96,560.
gold jewelery

You May Like